புதன், ஜூன் 20, 2012

.


ஏகஇறைவனின் திருப்பெயரால்....


மருத்துவம் என்பது சேவையாக கருதி செயல்பட்ட காலம் போய் இன்று அது காசு காய்க்கும் மரமாக மாற்றப்பட்டு விட்டதை ஓரளவு எல்லோரும் அறிந்து வைத்திருக்கின்றோம்.

மருத்துவத்தை உலகுக்கு அறிமுகப் படுத்திய இப்னு ஸீனா என்ற மருத்துவ மாமேதை அவர்கள் இதை சேவையாகவே செய்தார்.

10 வயதில் குர்ஆனைக் கற்று முடித்து தனது இருபதாம் வயதில் மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டு 57 வது வயதில் இறப்பெய்தினார்.

மருத்துவ கலைப் பற்றி 19 நூல்களை எழுதி பிற்கால மருத்துவர்களுக்கு மிகப் பெரிய சேவையை செய்தார் அவற்றில் கால் முதல்> தலை வரை நோய் வருவதற்கான அறிகுறிகளையும்> அதற்கான நிவாரணிகளையும் எழுதி வைத்தார்.

அவர் மருத்துவம் சம்மந்தமாக எழுதிய ''கானூன் அல்கித்தாப்'' என்றப் புத்தகத்தை அன்றைய மேற்கத்திய அறிஞர் ஓஸ்லெர் அவர்கள் அது ஒரு மருத்துவத் துறையின் வேதநூல் என்று வர்ணித்தார்.

இப்னு ஸீனா அவர்களின் மகத்தான சேவையை அறிந்த ஐரோப்பாவின் மருத்துவ ஆராய்ச்சியாளர் பலரால் எழுதப்படும் இன்றைய மருத்துவம் சம்மந்தமான நூல்களில் இப்னு ஸீனா அவர்களை யுஎiஉநnயெ என்றப் பெயரில் மேற்கோள் காட்டி எழுதும் அளவுக்கு மருத்துத்துறையின் முன்னோடிகளில் முதன்மையானவர்.

இன்று பணம் என்ற ஒன்றின் மீது மட்டும் வெறித்தனமாக செயல்படும் சில தனியார் மருத்துவர்களின்> ஈவிறக்கமற்ற செயல்பாடுகளின் காரணத்தால் மருத்துவம் சேவை என்பது மாறி கடைச் சரக்காகி விட்டது.

அனைத்துக் கருவிகளாலும்...
தலைவலி காய்ச்சல் என்றுப் போனால் கூட சில தனியார் மருத்துவர்களிடம் இருக்கும் அதி நவீன மருத்துவ சோதனைக் கருவிகளால் உடல் முழுவதையும் சோதனைக்குட்படுத்தி ஒவ்வொரு சோதனைக்கும் ஒருத் தொகையை நிர்ணயித்து மணிப் பர்ஸை காலியாக்கி விடுவார்கள். திரும்பி ஊர் செல்லக் கூட காசு இல்லாமல் மாத்திரைகளில் சிலவற்றகை; குறைத்துக் கொண்டு பஸ்ஸூக்கு மட்டும் மாத்திஜரைகளில் குறைத்துக் கொண்டு ஒரு டீ கூட குடிக்காமல் ஊர் போய் சேரும் அவல நிலை பலருக்கு ஏற்படுகிறது.

சில மருத்துவர்கள் அவர்களிம் இருக்கும் கருவிகளுக்கு மட்டுமே டெஸ்ட் எழுதிக் கொடுப்பார்கள் குறிப்பிட்ட வியாதிகளைக் கண்டறியும் கருவி அவர்களிடம் இல்லை என்றால் க்ளினிக் அல்லாமல் வெறும் லேப் மட்டும் நடத்துபவர்களிடம் டெஸ்ட்டுக்கு அனுப்புவார்கள் அந்த லேப்களிலும் குறிப்பிட்டக் கருவி இல்லை என்றால் அடுத்த க்ளினிக்கிற்கு அனுப்ப மாட்டார்கள் காரணம் கஸ்டமர் (?) மிஸ்ஸாகி விடுமாம் (?) என்னே சேவை மனப்பான்மை (?) அதனால் அந்த வியாதிக்கு மட்டும் தோராயமாக மருந்து எழுதிக் கொடுத்து வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள்.

நேற்று வேறொரு டாகடர் எழுதிக் கொடுத்த அனைத்து டெஸ்டுகளுடன் இன்றுப் புதிய டாக்டரை அனுகினால் நேற்று எடுத்த அனைத்து டெஸ்டுகளையும் குப்பைக்கு அனுப்பி விட்டு மீண்டும் அதே டெஸ்டுகளை இவரிடம் உள்ள கருவிகளில் எடுக்க எழுதிக் கொடுப்பார்.    

பணத்திற்காக...
சிலத் தனியார் டாக்டர்களால் பல வேளை உயிரையும் இழந்துப் பெரும் பொருளாதாரத்தையும் இழக்க நேரிடுகிறது (இருப்பவர்கள் எடுத்துக் கொடுத்து விடுவார்கள், இல்லாதவர்கள் சடலத்தை icu வார்டிலிருந்து பணத்தைக் கட்டி வெளியில் எடுப்பதற்கு படும் அவஸ்தையை சொல்லி மாளாது )

கிராமப் புறங்களில் உள்ள சில தனியார் மருத்துவர்கள் தன்னால் இந்த கேஸை பார்க்க முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிந்ததன் பின்னரும் உடனே பெரிய ஆஸ்பத்திரிக்கு மாற்றுவதற்கு சம்மதிக்க மாட்டார்கள் நோயாளியின் இறுதி மூச்சு வரை நோயாளியுடன் போராடி பயிற்சி எடுத்துக் கொண்டு பணத்தையும் கறந்து விடுவார்கள்.

முடியப் போகிறது என்றுத் தெரிந்ததன் பின்னரே மூக்கில் உள்ள டியூப்பை கழட்டாமல் அழைத்துசு; செல்லுங்கள் என்று அட்வைஸ் வேறு செய்து ( கழட்டினால் நின்று விடும் என்று அவருக்குத் தெரியும் ) அடுத்த மருத்தவரிடம் அனுப்புவதற்கு சம்மதிப்பார்.

இவ்வாறு மூக்கில் டியூப்புடன் ஸ்ட்ரெச்சரில் வைத்து தள்ளிக்கொண்டு அவரது பெற்றார்> உற்றார்> உறவினர்கள் கண்ணீரும்> கம்பலையுமாய் வருவதைக் கண்ட பட்டணத்து டாக்டர் நேராக icu க்கு அனுப்பி கதவைத் தாழிட்டு விடுவார். ஏறத்தாழ நோயாளி ஏற்கனவே இறந்திருப்பார்> அல்லது இறந்து கொண்டிருப்பார் ஆனாலும் அவர் பங்கிற்கு முடிந்தவற்றை கறப்பதற்காக செத்த உடம்பில் ஊசிகளால் ஏராளமான துளைகள் இட்டு ட்ரிப்பை மாட்டி விட்டு ஒன்றிரெண்டு நாட்கள் அதே நிலையில் icu ல் படுக்க வைத்து விட்டு மணிக்கொருத் தொகை என்றுக் கறந்து விட்டு சடலத்தை கையில் கொடுத்து அனுப்புவார்.

அறுவை சிகிச்சை
ஒரு காலத்தில் அறவே படிப்பறிவில்லாத கிராமத்துப் பெண்கள் பிரசவம் பார்ப்பார்கள் அவர்களிடம் பிரசவம் பாரத்தப் பெண்மணிகள் எல்லாம் பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளை சுகப்பிரசவமாகவே பெற்றிருக்கன்றனர் ஒன்றிரெண்டு மட்டுமே அதுவும் குழந்தையின் நிலை வயற்றில் மாற்றமாக இருந்தால் மட்டுமே ஆஸ்பத்திரிக்கு அனுப்புவார்கள் இன்றைய நிலையோ படித்த மருத்துவர்களால் அதிகபட்சம்  ஆப்பரேஷனில் தான் முடிகிறது ஒன்றிரெண்டு மட்டுமே சுகப்பிரசவமத்தில் முடிவதைப் பார்க்கின்றோம். இதுவும் பணத்தை குறிக்கோலாக கொண்டே செய்கின்றனர். 

ஈரலில் ஈரமில்லாதவர்கள்.
பணத்திற்காக கடந்த காலங்களில் தமிழகம் முழுவதையும் கலக்கிய டாக்டர்களால் திருடப்பட்ட கிட்னி திருட்டு சம்பவத்தைப் படித்திருக்கின்றோம். போலீஸாரின் தேடுதல் வேட்டையில் சிக்கிய கிட்னி திரு(டாக்டர்)களின் பெயர்களை பட்டியலிட்டதன் பின்னரே இவர்களது அட்டூழியம் ஓரளவு அடங்கியது.

சமீபத்தில் மாலைமலர் செய்தியில் கீழே ஒரு அதிர்ச்சித் தகவலைப் படித்தோம்.
மதுரைஇ ஜூலை. 11-
மதுரை விராட்டிபத்தை சேர்ந்த செல்லமணி என்பவரின் மகன் சிவா (வயது 26) கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிவாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீர் என காய்ச்சல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து காளவாசலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளித்தும் காய்ச்சல் குணமாகாததால் கே.கே.நகரில் உள்ள மற்றொரு தனியார் ஆஸ்பத்திரியில் சிவா சேர்க்கப்பட்டார். அங்கு ஏஃசி. வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. 5 நாட்கள் வரை சிகிச்சை அளித்தும் சிவாவுக்கு நோய் குணமாகவில்லை. மாறாக உடல் சோர்வு அடைந்து மயக்க நிலைக்கு தள்ளப்பட்டார். அங்குள்ள டாக்டர்களிடம் சிவாவின் உடல்நிலை குறித்து கேட்டனர்.

அதற்கு ''ஆபத்தான நிலையில் இருக்கிறார். கோமாவில் இருக்கும் அவருக்கு பொருத்தப்பட்ட சுவாச கருவியை எடுத்து விட்டால் உயிர் பிரிந்து விடும். எனவே உடனடியாக வீட்டுக்கு கொண்டு சென்று ஆக வேண்டிய வேலையை கவனியுங்கள் என்று கூறிவிட்டு சென்றார்.

இதனால் பெற்றோரும் உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர். வார்டுக்குள் சென்று பார்த்தபோது பேச்சு மூச்சு இல்லாதது போல கிடந்தார். இறந்து விட்டதாக கருதி உடலை வீட்டக்கு கொண்டு சென்றனர். பின்னர் வெளியூரில் வசித்து வரும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனால் பல்வேறு ஊர்களில் இருந்து உறவினர்கள் விராட்டிபத்துக்கு வந்தனர். வீட்டில் கிடத்தி போட்டு இருந்த சிவாவின் உடலுக்கு பலர் மாலை அணிவித்தனர். மனைவி மற்றும் நெருங்கிய உறவினர் கதறி அழுதனர். அப்போது ஒரு பெண் ''என் ராசாவே...இப்படி கொஞ்ச வயலிலேயே குழந்தைகளை அனாதையாக விட்டுட்டு போயிட்டியே... ராசா... என்று சிவாவின் நெஞ்சில் கையை வைத்து அழுத்தி கதறி அழுதார். அப்போது சிவாவின் கண்கள் திறந்தன.

இதை அறிந்த உறவினர் அதிர்ச்சி அடைந்து சிவாவின் உடலை அங்கும் இங்குமாக ஆட்டினர். ஓரளவு அவர் மயக்க நிலையில் இருந்து தெளிந்தது போல கண் விழித்தார். உடனடியாக அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். தற்போது சகஜ நிலைக்கு வந்துள்ளார்.

இதுகுறித்து சிவாவின் உறவினர் ஒருவர் கூறும் போதுஇ சிவாவுக்கு திடீர் என காய்ச்சல் ஏற்பட்டது. தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தால் உடனடியாக குணமாகி வேலைக்கு செல்லலாம் என கருதி சேர்த்தோம். ஆனால் சாதாரண காய்ச்சலுக்கு 17 நாட்கள் வரை ஆஸ்பத்திரியில் வைத்து சிகிச்சை அளித்தனர். ஆனால் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. மாறாக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டதோடு மட்டுமல்லாமல் சிகிச்சை கட்டணமாக ரூ.1 12 லட்சம் வரை வாங்கி விட்டார்கள். இறந்து விட்டதாக கருதி இறுதி சடங்கு ஏற்பாடு செய்த போதுதான் திடீர் என சிவா கண் விழித்தார். அவரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தோம். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்த பின்னர் தற்போது நன்றாக உள்ளார். தனியார் ஆஸ்பத்திரியில் பணத்தை குறி வைத்து சிகிச்சை அளிக்கிறார்கள். இந்த நிலை மாற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

ஒரு கூலித் தொழிலாளி செத்து விட்டார் என்றுக் கூறி சடலத்தை அனுப்பும் போது அவருக்கு தீட்டிய பில் ஒன்றரை லட்சமாம் ?

செத்தவர் திரும்பி வரமுடியாது
பணம் கறப்பதிலேயே குறியாக செயல்பட்டதால் பேஷன்ட் செத்தாரா ? இருக்கிறாரா ? என்று கவனிக்க வில்லை.

மேலும் இது இரண்டாவது டாகடர் என்பதால் மூன்றாவது டாக்மரிடம் மாற்றினால் க்ளினிக் பெயர் கெடும் என்றுக் கருதிக் கூட செத்து விட்டார் என்று அனுப்பி இருக்கலாம்.

இவர்களால் முடியாததை அரசு மருத்துவர்கள் குணப்படுத்தி சாதனைப் படைத்து இருக்கின்றனர். அரசு உடனடியாக இது விஷயத்தில் தலையிட்டு தனியார் மருத்துவர்களின் அடாவடித் தனத்தை ஒடுக்குவதற்கு முன்வர வேண்டும்.
 

وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை .எம்.பாரூக்