வியாழன், ஜனவரி 26, 2012

சமூக இணைய தளமா ? சமூக விரோத கூடமா ? தொடர்ந்து அழிவை நோக்கி இழுத்துச்செல்லும் ஃபேஸ்புக்





அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

உலகில் நடைபெறும் விவாகரத்துகளில் மூன்றில் ஒன்று ஃபேஸ்புக் (கூடா) நட்பினால் ஏற்படுவதாக லண்டனிலிருந்து வெளிவரும் டெய்லி மெயில் பத்திரிகை புள்ளி விபரத்துடன் தகவல் வெளியிட்டு உலக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. ஃபேஸ்புக் உறுப்பினர்களின் நட்புகள் பாரதூரமான விiவுகளையும் சமூகத்திற்கு பெரும் கேட்டையும் தொடர்ந்து உண்டுப் பண்ணி வருவதை இதற்கு முன் இதே ஊடகங்கள் வாயிலாகவும் பல சம்பவங்களைப் படித்து அறிந்து வருகிறோம்.

இதற்கு சமூக இணையதளம் என்றும் ஒரு செல்லப் பெயர் உண்டு ஆனால் இதை சமூக விரோத இணையதளம் என்றே அழைக்க வேண்டும். இந்த சமூக விரோத இணையதளத்தில் உறுப்பினராகும் புதியவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. 

இந்த கூடா நட்பினால் ஆள் மாறாட்டங்கள் மூலமாக விபச்சாரம், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, பண மோசடி என்று தொடர்ந்து சமூக விரோத செயல்கள் நடந்து கொண்டே வருகின்றன. இதில் ஊர், பேர் தெரியாமல் முக லட்சனம் பாராமல் பல வருடங்கள் சாட்டிங்கில் ஈடுபடுகின்றனர் ஆனால் குறுகிய நாட்களில் மனம் விட்டுப் பழகி ஒன்றரக் கலந்து விடுவதால் தங்களுடைய கடந்த கால அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் பொழுது ஒவ்வொருவரும் தங்களை பணம் படைத்தவர்களாகவும், இளைஞர், இளைஞிகளாகவும், பட்டதாரிகளாகவும், வல்லுநர்களாகவும் காட்டிக் கொள்கின்றனர்.

இதனால் அழகுக்காகவும், பணத்துக்காகவும் ஆசைப்படுபவர்கள் சினிமா, சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகளை மிஞ்சும் அளவுக்கு நடிக்கத் தொடங்குகின்றனர் இது இறுதியில் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரத்தில் முடிந்து விடுகின்றது.

இதில் வேறு சிலர் நேரத்தை கடத்துவதற்காகவே பலரை வளைத்துப்போட்டு பெயரை மாற்றி ஊரை மாற்றி வயதை மாற்றி வரம்பு மீறி தங்களுடைய கடந்த கால காதல், கள்ளக் காதல் அனுபவங்களை ஆபாச நடையில் எழுதி அற்ப சந்தோஷம் அடைந்து கொள்வர் இறுதியில் இது போன்ற ஆள் மாறாட்ட கேம் விளையாட்டில் கணவன் மனைவியே மாட்டிக் கொள்வதும் உண்டு வேறு சிலரிடம் சாட்டிங்கில் ஈடுபடும் பொழுதும் மாட்டிக் கொள்வதுண்டு இது மாதிரி நடந்த சம்பவங்களே நீதி மன்றங்களில் வழக்கு நடந்து இறுதியில் மேற்காணும் விதம் விவாகரத்தில் முடிந்துள்ளது.

கருத்து வேறுபாடுகள் கொண்டுள்ள தம்பதிகளுக்கு ஆன்லைன் சட்ட ஆலோசனை வழங்கும் டைவர்ஸ் ஆன்லைன் நிறுவன நிர்வாக இயக்குனர் மார்க் கெனான் கூறும் பொழுது நடந்து முடிந்த 2011ல் மட்டும் நீதிமன்றங்களுக்கு சுமார் 5000 விவாகரத்து வழக்குகள் வந்ததாகவும் அதில் மூன்றில் ஒன்று அதாவது 33 சதவீதம் ஃபேஸ்புக் கூடா நட்பினால் ஏற்பட்டவைகள் என்றும் தெரிவித்துள்ளார்.

கணவன் மனைவிகளுடைய முன்னால் காதல், கள்;ள காதல் சமாச்சாரத்தினால் விவாகரத்தில் முடிந்து அவரவர் வேறொரு துணையை தேடிக் கொண்டு லைஃபில் செட்டிலாகி விடுகின்றனர். ஆனால் பிரிந்து வேறொரு உறவில் இணைய முடியாத தந்தையும் மகளும் இந்த ஆள் மாறாட்ட கேமில் சமீபத்தில் மாட்டிக் கொண்டு மானமிழந்த நிகழ்வும் உண்டு. தந்தைக்கே மகளின் ஆபாச புகைப்படம் ஃபேஸ்புக்கிலிருந்து எடுத்து அனுப்பிய கேவலமும் நடந்தேறியது உண்டு. 

உறுப்பினர்களின் விபரங்களை திருடுவது எமது கொள்கையின் மீறலாகும் என்றும் இதில் அத்து மீறுபவர்களின் மீது கடும் நடிவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஃபேஸ்புக் நிர்வாக இயக்குனர் பேரி சச்னிட்டின் வாக்குறுதியை நம்பியே இதன் உறுப்பினர்கள் இதில் தங்களின் விபரங்களை புகைப்படத்துடன் பதிந்தனர்.

ஆனால் இதிலிருந்து 250.000 உறுப்பினர்களின் விபரங்கள் புகைப்படத்துடன் திருடி டேட்டிங் தளங்கள் வெளியாக்கி உள்ளது சமீபத்தில் கண்டு பிடிக்கப்பட்டது. இதில் லவ்லி ஃபேஸஸ் எனும் ஆபாச இணையதளமும் ஃபேஸ்புக்கிலிருந்து ஆயிரக்கணக்கான உறுப்பினர்களின் விபரங்களை புகைப்படத்துடன் டேட்டிங் பக்கத்தில் வெயிட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

ஆனால் இதுவரை ஃபேஸ்புக் நிர்வாகம் அதன் மீது எந்த நடிவடிக்கையும் எடுக்கவில்லை இவர்களுக்குத் தெரியாமல் இது நடந்திருக்க வாய்ப்பும் இல்லை. இதைப் பற்றி எல்லாம் அதன் உறப்பினர்கள் அறவே கண்டு கொண்டதாகவும் தெரியவில்லை அதனால் இதை ஒரு மேட்டராக ஃபேஸ்புக் நிறுவனமும் எடுத்துக் கொள்ளவில்லை.

ஆனால் அவர்களின் பெற்றோர்கள் பொறுப்பாளர்கள் இதன் மீது கவனம் செலுத்த வில்லை என்றால் மான மரியாதையை இழப்பதுடன் காலா காலத்தில் கல்யாணம் செய்து கொடுத்து வாழ்க்கையில் அவர்களை ஐக்கியமாக்கி விடுவது கைக்கெட்டாத காரியமாகி விடலாம் சிந்தித்தால் சீர்பெறலாம்.



وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்